-->

Brother and Sister Quotes in Tamil | அண்ணன் தங்கை பாசக் கவிதைகள்

அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த Brother and sister Quotes in Tamil, Brother quotes in Tamil, Sister quotes in Tamil...
Brother and sister Quotes in Tamil

Brother and sister Quotes in Tamil

அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த Brother and sister Quotes in Tamil, Brother quotes in Tamil, Sister quotes in Tamil பற்றி இந்த இடுகையில் தொகுப்பட்டுள்ளது.

தொடர்புடைய தேடல்கள்
  • Emotional Brother and sister quotes in tamil
  • Brother and sister love relationship quotes in tamil
  • Brother sister quotes in tamil
  • Brother and sister relationship quotes in tamil

Sister Quotes in Tamil

1. உடன் பிறக்கவில்லை என்றாலும் உள்ளம் கலந்து உறவானோம்.. உயிரே போகும் நிலை வந்தாலும் இந்த அண்ணன் தங்கை உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.

2. ஆயிரம் தான் அவனிடம் சண்டையிட்டாலும், பேசாமல் இருப்பதில்லை.. இருக்கவும் முடியாது.. என் அண்ணனிடம்!!

Sister brother kavithai in Tamil lyrics

3. ஒவ்வொரு தங்கையின் மிகப் பெரிய கர்வம் தனக்கொரு அண்ணன் இருக்கிறான் என்பதே!!

4. தங்கையும் அன்னையாவாள்.. தன் அண்ணனுக்கொரு துன்பம் நேர்கையில்...

5. அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கம் உண்டு. எந்த ஆணாவது தன்னை தங்கச்சி என்று அழைக்கமாட்டானா என்று..

6. தாய்க்கு மேலாக அன்பு காட்ட அண்ணன் என்னும் உறவு இருந்தால் வாழும் காலம் யாவும் சொர்கமே..

7. அண்ணனுடன் பிறந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.. அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று!!

8. உன்னை நினைக்க பல பேர் இருக்கலாம்.. ஆனால் உன்னைப் பற்றி மட்டுமே நினைப்பது உன் அன்பு தங்கை நானாக மட்டுமே இருப்பேன்!!

9. எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும், இரத்த பாசத்தினால் வரும் அண்ணன் தங்கை உறவு என்றுமே உருக்கமானதே!!

10. பூக்களில் உள்ள நிறங்கள் மாறப்போவதில்லை.. அதன் மனமும் மாறப்போவதில்லை.. அது போலத்தான் நம் உறவும், உணர்வும் என்றும் மாறாது!!

Anna sister quotes in Tamil

11. இந்த உலகில் தன்னை ஏமாற்ற நினைக்காத ஆண், தன் அப்பாவிற்கு அடுத்ததாக அண்ணன் தான்..

12. உலகில் ரசிக்க ஆயிரம் விஷயம் இருந்தாலும் பெண்கள் ரசிக்கக் கூடிய ஒரே விஷயம் அண்ணனின் பாசம் மட்டுமே!!

13. இரத்த பந்தம் அண்ணன் தங்கை உறவை மட்டுமே நிர்ணயிப்பதில்லை.. இரு உயிர்களின் பாசப் பிணைப்பையே நிர்ணயிக்கிறது!!

14. உன்னை உயிராக நினைத்து விட்டேன். உயிர் போனாலும் அண்ணா உன்னை மறக்க மாட்டேன்...

15. தகப்பனை விட தங்கையின் மேல் நூறு மடங்கு பாசம் காட்டுவது, அண்ணன் என்ற உறவால் மட்டுமே முடியும்.

16. ஆண்டுகள் ஆயிரம் ஆகலாம். ஆனால் அண்ணன் தங்கை பாசம் ஆயுள்வரை மாறாது.

17. ஒட்டிப் பிறக்கவில்லை.. ஒரு தாய் வயிறும் இல்லை ஆனால் இவற்றை விட மேலானது அண்ணன் தங்கை உறவு (உடன் பிறவா தங்கை)

18. வாழ்க்கை பயணங்களில் தங்கைளின் ஜன்னலோர இருக்கைகள் அண்ணன்களே!!

Brother quotes in Tamil lyrics

Brother Quotes in Tamil

19. ஒரு ஆண் அழகாகிறான். தனது தங்கைக்கு, தான் தான் தந்தை என்று உணரும்போது..

20. கோபத்தில் குட்டிப்பிசாசு என்றாலும், எல்லா அண்ணன்களின் மனதிலும் தன் தங்கை தேவதையே!!

21. மறு பிறவி ஒன்று இருந்தால், உன் உடன் பிறந்த அண்ணனாக பிறக்க வேண்டும். இல்லையேல் உன் மடி தவழும் மகனாய் பிறக்கும் வரம் வேண்டும் என் உயிர் தங்கையே!!

22. தாயிடம் கூட மறைப்பதற்க்கு சில உண்மைகள் இருக்கலாம். தங்கையிடம் மறைப்பதற்க்கு பொய்கள் கூட ஒன்றும் இல்லை.

23. உடன் பிறவாத உன்னை உயிருக்கும் மேலாக நேசிப்பதின் காரணம் இன்னும் புரியவில்லை.. (உடன் பிறவா அண்ணன் தங்கை)

24. ஒரு தங்கை தன் அண்ணன் மீது காட்டக் கூடிய அதிகபட்ச பாசமே, அவன் மீது காட்டக் கூடிய சண்டையாகத் தான் இருக்கும்.

25. வெளிக்காட்டிக் கொள்ள முடியாத விலை மாதிப்பில்லா பாசம், அண்ணன் தங்கை உறவு!!

26. ஒவ்வொரு மனித்துளி நேரமும் என்னை சிரிக்க வைக்கும் ஒட்டுமொத்த சந்தோசத்தின் சாயல் நீயே!!! எனக்குள் உயிராய் என் உடன் பிறந்த சகோதரியாய் வாழ்பவள் நீயே!!

Sister brother love quotes Tamil

27. உள்ளங்கள் ஒன்றாகி, உறவுகளில் கலந்திருக்கும் உடன் பிறவா நம் உறவுக்கு, இன்றல்ல நாளையல்ல.. என்றென்றும் வாழ்வுண்டு... (உடன் பிறவா அண்ணன் தங்கை)

28. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசும் அன்பு.. எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத அன்பு.. அண்ணன் தங்கை உறவுகளிடம் மட்டுமே உண்டு!!

29. ஆயிரம் முறை சண்டை போட்டாலும், அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் உறவு அண்ணன் தங்கை உறவு மட்டுமே!!

30. அன்பாய் நீ என்னோடு இருக்கும் வரை எதுவும் என் மனதை காயப்படுத்த முடியாது. உனதன்போடு நிதமும் ஏதோ ஒரு மகிழ்வோடு கடந்திடுமே என் மனம் அழகாய்!!

Brother quotes in Tamil Words

31. ஒரு தாய் வயிற்றில் பிறந்தால் மடுமல்ல.. உண்மையான பாசம் இருந்தாலும் கூட அண்ணன் தங்கை ஆகலாம்.

32. அடித்துக்கொள்வது மட்டும் அண்ணன் தங்கை உறவு அல்ல.. எங்களைப் போல் அன்பு செய்யவும் யாரும் இல்லை.. அது தான் அண்ணன் தங்கை உறவு!!

33. பிறந்த கருவறை வேறாக இருந்தாலும் அன்பெனும் அறையில் ஆயுள் முழுக்க இணைந்திருப்போம் (உடன் பிறவா அண்ணன் தங்கை)

34. உன்னால் ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாவம்.. உனக்காக ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாசம். அது தான் என் தங்கையின் உறவு!!

35. ஒற்றுமையாக இருப்போம் என்றும். அண்ணன் தங்கை உறவாக மட்டும் அல்ல.. உயிராக..

36. ஆயிரம் தாயின் பாசத்தை தங்கையிடமும், ஆயிரம் தந்தையின் பாசத்தை அண்ணனிடமும் காணலாம்.

37. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், இடைவெளி இல்லாத உறவாய் உயர்த்தி சொல்வதில் என் தங்கையை மிஞ்ச யாரும் இல்லை!!

Sister brother Kavithaikal

இதையும் படியுங்கள்: