-->

40+【Best】 One Side Love Quotes in Tamil | ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

ஒருதலைக் காதலை வெளிப்படுத்தக் கூடிய 40-க்கும் மேற்ப்பட்ட One Side Love Quotes in Tamil, Pain One Sided love Quotes in Tamil பற்றி இங்கு தொகுக்க...

One Side Love Quotes in Tamil

ஒருதலைக் காதலை வெளிப்படுத்தக் கூடிய 40-க்கும் மேற்ப்பட்ட One Side Love Quotes in Tamil, Pain One Sided love Quotes in Tamil பற்றி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தேடல்கள்

  • One Side love Kavithai
  • One Side love Kavithai Tamil
  • One Side love failure Quotes Tamil
  • Pain One Sided love Quotes in Tamil
  • One Side love Tamil Kavithai

One Side Love Kavithai

1. நான் உன் மீது கொண்ட காதல் உன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. உன்னைத் தவிர..

2. அதிகமாய் பேசியதில்லை அவளிடம் என்றாலும் என் உள்ளம், அதிகமாய் பேசுவது அவளைப் பற்றியே 

One Side Love Quotes in Tamil
Source: Yourquotes.in

3. ஒரு நாளில் உன்னை ஆயிரம் பேர் நினைக்கலாம். ஆனால் ஒரு நாளில் உன்னை ஆயிரம் முறை நினைப்பது நான் மட்டுமே

4. கண் பார்த்துக் காதல் செய்வதில் இஷ்டம் இல்லை. கண்மூடித்தனமான காதல் செய்யவும் இஷ்டம் இல்லை. கண் மூடும் வரை காதல் செய்வேன் என்னவளே!! உன் காதல் நான் இல்லை எனத் தெரிந்தாலும் கூட..

One Side love quotes Tamil download
Source: Yourquotes.in

5. ஒருதலை காதலின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, அவளைக் கண்டவுடன் அவள் புன்னகைக்கும் ஒரு சிறு புன்னகை தான்.

6. அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை. பாசத்துடன் ஒரு பார்வை.. அக்கரையுடன் ஒரு வார்த்தை.

7. என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத் தரவில்லை. உன்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க கூடாது என்பதையும் தான் கற்றுத் தந்தது.

8. உனக்காக காத்திருக்கிறேன். உன்னை மறக்க முடியாததால் அல்ல.. உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியாததால்.

9. வரிகளில் வசப்பட்ட காதல், உன்னிடத்தில் வசப்படுவது எப்போது..

Best love breakup quotes in Tamil
Source: Yourquotes.in

10. நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அந்த நொடிகளுக்கு தெரியும் நம் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம் 

11. உன்னோடு வாழ முயன்றேன் முடியவில்லை. அதனால் தான் உனக்காக வாழ முடிவு செய்து விட்டேன்..

12. சந்திக்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும், என் சிந்தனை முழுவதும் நீ மட்டுமே..

13. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணெதிரே கடந்து சென்றான். தவிப்புடன் நான்.. தடுமாற்றத்துடன் அவன்.. ஏமாற்றத்துடன் எங்கள் காதல்..

Love pain quotes in Tamil
Source: Yourquotes.in

14. உனக்காக வாங்கப்பட்ட ரோஜா உனக்கு தரப் படாமல் இருப்பது போல், உன் மீதான என் காதலும் உன்னிடம் சொல்லப்படாமல் என்னிடமே இருக்கிறது..

15. உன்னிடம் காதலை சொல்ல எல்லா முயற்சிகளையும் எடுத்து விட்டேன். ஆனாலும் தாமதம்.. உன் வெட்கத்தால்.!!

16. கவிதை எழுத வேண்டுமென பேனாவை தூக்கினால் , கைகள் தானாக கிறுக்குதடி உன் பெயரை..

17. நீ அணைக்க வேண்டும் என்று உன்னிடம் நெருங்கவில்லை. உன் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக நெருங்குகிறேன்.

18. காதலைத் தெரிவிக்காத ஒருவன்தான், உன்னை யாருமே நேசிக்காத அளவிற்கு நேசித்துக் கொண்டிருப்பான்.. ஒருதலைக் காதல் என்னும் பெயரில்.

True love quotes in Tamil
Source: Yourquotes.in

19. நீ என்னைக் கண்டுகொள்ளாமல் தினம் கடந்து போவதும், நான் உன்னைக் காண்பது தெரியாதது போல் நீ விலகிச் செல்வதும், நீ கண்டதாய் எண்ணி எனக்குள் நானே மகிழ்வதும் தீராத ஏமாற்றங்களே..

20. உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட உன்னை எதிர் பார்த்த நாட்களே அதிகம்.  இன்னும் எதிர் பார்க்கிறேன் உன்னை எதிரில் பார்க்க..

21. பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன். ஆனால் உன்னிடம் பேச நினைக்கும் போது மட்டும் முந்திக் கொள்கிறது என் மௌனம்.

22. மறைந்திருந்து பார்க்கிறேன்.. அனு தினமும்.. மறு கணம் நீ என்னைப் பார்ப்பாய் என்பதையும் மறந்து..

Love feeling quotes in Tamil
Source: Yourquotes.in

23. உதடுகள் சொல்லத் துடிக்கும். உள்ளம் சொல்லாமலே துடிக்கும்.. ஒரு தலை காதலில்

24. என் கண்கள் இரண்டும் உன்னைக் காண துடிக்கிறது.. என்னவென்று சொல்லிப் புரிய வைப்பேன்.. என் இமைகளே நீதான் என்று..

25. உன்னை அழைக்க நினைக்கும் நேரங்களில் எனக்குள் ஒரு தயக்கம். நான் உனக்கு முக்கியமாக இருந்திருந்தால் நீயே என்னை அழைத்திருப்பாய்.

26. நிஜத்தில் சேர்வது மட்டுமல்ல.. நினைவுகளில் வாழ்வதும் காதல் தான்..

27. உன்னை ரசிக்க அனுமதி தந்த நீ உந்தன் கைகளை பிடிக்க அனுமதி தருவாயா...

28.விழிகளை மூடினேன்.. உறங்குவதற்காக அல்ல உன்னை காண்பதற்காக.. ஆனால் அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் தந்தாய்..

29. மனதிற்க்கு பிடித்தவர்களையும் அதிக பாசம் வைப்பவர்களையும் ஏனோ தொலைவில் வைத்தே அழகு பார்க்கிறது...விதி

30. துணிந்து சென்றேன் என் காதல் சொல்ல. துணிவிருந்தும் சொல்ல வில்லை..  ஏனெனில், அவளை தூரத்தில் இருந்து பார்க்கும் பார்வை மறந்து விடுமோ என்று..

இதையும் படியுங்கள்:

One Side love failure Quotes in Tamil

31. தெளிந்த நீரில் உன் முகம். எனக்கோ உயிர் போகும் தாகம். தொட்டால் களைந்து விடும் உன் முகம்.. போகட்டும் என் உயிர் உன் முகத்தை பார்த்துக் கொண்டே..

32. தொலைந்து போன பக்கங்ககளில் பல நினைவுகளை எடுத்துச் செல்கிறது சில மறதிகள்.. உன்னைத் தவிர்த்த வரிகளை மட்டும் என்னில் விட்டுவிட்டு..

Fake love quotes in Tamil
Source: Yourquotes.in

33. நான் இதுவரை எழுதாத கவிதைகளில் காத்திருக்கிறது நீயின்றி கடக்கவிருக்கும் என் வாழ்வின் வழியும், வலியும்.

34. ஒற்றை சிறகில் பயணிக்கும் பறவையாகவே வாழ்கிறது என் காதல், ஒருதலைக் காதல் என்னும் பெயரில்.

35. இரவினில் தூக்கம் இல்லை. உன்னை நினைப்பதாலோ என்னவோ, கனவொன்று வந்தாலும் நீயின்றி வருவதில்லை

36. நினைத்துப் பார்த்தேன்.. கண்ணீராய் சிந்தின... அவளுடன் பேச நினைத்த அந்த காதல் வார்த்தைகள்.

37. காதலை சொல்லியும் பதில் சொல்லாத போது தான் ஒவ்வொரு முறையும் இதயம் உடைந்து  போகிறது..

38. மறக்க சொல்கிறாய்.. எதை மறப்பது உன்னுள் தொலைந்த என்னையா இல்லை என்னுள் தொலையாமல் இருக்குமுன் நினைவுகளையா..

39. நடை பழகிய பின்னும் தடுமாறும் குழந்தையைப் போல, பேச பழகியப் பின்னும் கூட தடுமாறுகிறேன் உன்னிடம்.

One Side love failure quotes in Tamil for boy
Source: Yourquotes.in

40. நான் என் மனதில் இருக்கும் காதலை உனக்கு புரிய வைக்கிறேன். ஆனால் நீ அடிக்கடி புரிய வைக்கிறாய்.. உன் மனதில் நான் இல்லை என்பதை.

41. உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும். கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல, என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்..

42. நீதான் வேண்டும் என்று யாரிடமும் கேட்கவும் முடியவில்லை.. உனக்காகத் தான் அழுகிறேன் என்று யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.

43. அன்று என் காதலியின் பெயரை பச்சைக் குத்திய நெஞ்சை தடவிப் பார்த்து இன்று என் மகள் கேட்கிறாள்.. என் மீது அவ்வளவு பாசமா அப்பா...

43. மணிக்கொருமுறை மணியைப் பார்க்கிறேன்.. மறு கணம் அவன் வரவை எதிர் பார்த்து..

One Side love failure quotes Tamil
Source: Yourquotes.in

44. உன் குறுஞ்செய்திக்காக காத்திருக்கும் போதெல்லாம், கொஞ்சமாக மறந்து போகிறேன்.. நெஞ்சைக் கீறி சென்றவனிடத்தில் என் நினைவு மிஞ்சி இருக்க வாய்ப்பில்லை என்பதை.

45. இளகிய மனம் கொண்டவர்களே.. உங்கள் இதயங்களை எனக்கு இலவசமாக கொடுங்கள்.. என்னவளின் நினைவுகளை சேமிக்க என் சிறிய இதயம் போதவில்லை...

இதையும் படியுங்கள்: