-->

Sad Love failure Quotes in Tamil With Images | காதல் தோல்வி கவிதைகள்

Love Failure Quotes in Tamil..., மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், உன்னை மறப்பதை..,உன்னைப் போல் நீ பேசிய வார்த்தைகளும் அழகாய் இருந்ததால், அவை பொய்யாகு...,

Love Failure Quotes in Tamil

  • Very Sad Love Quotes Images In Tamil
  • Pain Love Quotes In Tamil
  • Detachment quotes in Tamil
  • Love Failure Sad Quotes
  • Love Sad Images Tamil
  • காதல் தோல்வி கவிதைகள்

Love Failure Quotes In Tamil Words

ஏன் விலகினோம் என்பதை விட ஏன் பழகினோம் என்பதுதான் அதிகம் வலிக்கிறது 

என்றுமே உன்னிடம் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். அன்று மறக்கத் தெரியாமல்.. இன்று வெறுக்கத் தெரியாமல்..

விலகிச் செல்ல உன்னிடம் காரணம் இருக்கிறது.. விடாமல் தொடர என்னிடம் அன்பு இருக்கிறது.. 

உன் கோபமும் மௌனமும் உன்னை பாதிக்காது.. ஆனால் உன்னை பிடித்தவர்களை பாதிக்கும் என்பதை மறந்து விடாதே!!

அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பை தேடுவதில் அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைத்து விடாது..

மரணம் ஒருமுறை தான் கொள்ளும். மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்..

நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை.. உன்னால் பிரிந்து இருக்க முடியும் என்பது தான் வலிக்கிறது..

ஒரு உறவு உன்னையே சுற்றி சுற்றி வருகிறது என்றால் அது போவதற்கு இடமில்லாமல் இல்லை.. உன்னை இழக்க மனம் இல்லாமல் தான்.. 

Love Failure Kavithai

என் அலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம் அழைத்தது நீதான் என்று எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறேன்..

பிடித்தவர்களை பிரிந்து வாழ முடியும்.. ஆனால் அவர்களை ஒரு நொடி கூட மறந்து வாழ முடியாது!!

இவ்வளவு எளிதில் நம்மை ஏமாற்றி விட்டார்களே என்று நினைக்கும் போது தான் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம்!!

நிச்சயம் ஒரு நாள் இந்த ஏமாற்றங்களும் ஏக்கங்களும் இல்லாமல் நிம்மதியாய் உறங்குவேன்.. என் கல்லறையில்.. 

எனக்காகவும் ஒரு இதயம் துடிக்கும் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் அதுவும் என்னிடம் நடித்து தான் சென்றது..

பாசம் குறைந்து விட்டால் பேசும் நேரமும் குறைந்து விடும்...

ஒருவருக்கு அடிக்கடி உங்களை நிரூபித்துக் கொண்டிருப்பதை விட.. கடைசி வரை அவர்கள் பார்வையில் குற்றவாளியாகவே இருந்துவிட்டு போகலாம்.

என் வலியை புரிந்து கொள்ள வேண்டாம்.. எனக்கும் வலிக்கும் என்பதை புரிந்து கொள் போதும்..

இருப்பது கையளவு இதயம்.. ஆனால்  வருவதோ கடலளவு காயம்..

உனக்காகவே எல்லோரையும் இழந்தேன்.. நீ என்னை இழப்பாய் என்று தெரியாமல்.. 

Love Failure Pain Quotes In Tamil

ஒரே ஒரு முறை என் அருகில் வா உயிரே.. என் வலிகளை சொல்லி அழுது உன் மடியினல் இறந்து விடுகிறேன்..

நீ திட்டி பேசும்போது கூட வலிக்கவில்லை.. ஆனால் நீ என்னிடம் பேசாமல் இருக்கும்போது தான் ஏனோ மனம் அதிகமாய் வலிக்கிறது..

வலிகளை விட கொடுமையானது நாம் நேசிக்கும் ஒருவரிடம் நம் விரும்பும்போது பேசாமல் போவது தான்.. 

விலை மதிப்பில்லா அன்பை எல்லோரிடமும் கொட்டாதீர்கள்.. சிலருக்கு அது குப்பையாக தெரியும்..

காதலியின் கழுத்து வளைவில் முத்தம் தேடியவன் என்றேனும் ஒருநாள் நண்பனின் தோளில் கண்ணீர் தேடியே தீர வேண்டும்..

மறக்க முடியாத நபர்களையும், தொலைக்க முடியாத நினைவுகளையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது.. எல்லோருடைய முதல் காதலும்..

Love Failure Quotes For Him In Tamil

மாறிவிட்டோம் என்பதை விட பல வலிகள் நம்மை மாற்றிவிட்டது என்பதே உண்மை!!

நீ எனக்கு கிடைத்த வரமென்று நினைத்தேன்.. ஆனால் நான் உனக்கு பாரம் என்பதை உணர்த்திவிட்டாய்...

எனக்காக எழுதப்பட்ட அனைத்து  சந்தோஷங்களும் நீரில் எழுதப்பட்டவைகளே..

உரிமை இல்லாத இடத்தில் எதையும் எதிர்பார்ப்பது தவறு.. அன்பையும் கூட தான்..

உன்னோடு பேச ஆயிரம் ஆசைகள் எனக்கும் இருந்தது.. நீதான் என்னை தொந்தரவாக நினைத்தாய்.. அதனால் தான் தொடர்வதை நிறுத்திக் கொண்டேன்..

நானும் வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.. காரணம் நான் வைத்த உண்மையான பாசம் பொய்யாகிப் போனதால்..

வலிகள் தந்த காயங்களை விட சில வார்த்தைகள் தந்த காயங்கள் தான் அதிகம்!!

Life Failure Quotes In Tamil

கனவோடு வாழ்ந்து விட்டேன் பாதி வாழ்க்கையை.. கற்பனையோடு வாழ்ந்து விடுவேன் மீதி வாழ்க்கையை..

உன் மௌனம் என்னை கலங்க வைப்பது போல்.. என் பிரிவும் ஒரு நாள் உன்னை கலங்க வைக்கும்..

நாம் யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நம்மை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.. வாழ்க்கை முழுவதும்..

ஒரு துளி அன்பை கொடுத்து நூறு துளி கண்ணீரை விலை கேட்பது தான் வாழ்க்கை..

கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு..

அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு இதயமும் அனாதை தான்.. அந்த வகையில் நானும் ஓர் அனாதை தான்..

நிம்மதி வேண்டும் என்று நினைக்கிறேன்.. ஆனால் நினைத்து நினைத்து நிம்மதியை இழக்கிறேன்..

இதையும் படியுங்கள்:

Love Failure Kavithai Tamil Lyrics

இன்னும் சற்று நெருங்கிக் கொண்டிருப்பதாய் நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.. உண்மையில் விலகிக் கொண்டிருப்பதை உணராமலே...

என்னை கொல்வதற்கு ஆயுதம் தேவையில்லை.. பாசம் என்னும் பெயரில் வேஷம் காட்டினாலே போதும்!!

நம்மை பற்றி ஒரு நொடி கூட யோசிக்காதவர்களைப் பற்றி தான் நாம் ஒவ்வொரு நொடியும் விடாமல் நேசித்துக் கொண்டிருக்கிறோம்..

புரியாத அன்பை புரிய வைக்கவும் கூடாது.. நம்மை பிடிக்காத யாரையும் தேடி போகவும் கூடாது!!

பேசுவதற்கு நேரம் இல்லாமல் அல்ல.. பேசுவதற்கு விருப்பம் இல்லாமல் தான் பல  உறவுகள் நேரமில்லை என்று சொல்லி விலகி போகிறார்கள்

சிலர் கொடுக்கும் வாக்குகள் எல்லாம் வெறும் சமாதானத்திற்காக மட்டுமே!!

பிடித்தவர்கள் கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்பது தெரிந்த பின்னும் உரிமையோடு எதையும் பேச முடிவதில்லை..

Love Failure Image Tamil Kavithai

உண்மையில் நேசிப்பவரால் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாது.. நேசிப்பது போல் நடிப்பவர் எத்தனை நாள் ஆனாலும் பேசாமல் இருப்பர்.

அனுசரித்து போனாலும் விட்டுக்கொடுத்து போனாலும் கடைசியில் கிடைப்பது வலியும் வேதனையும் மட்டும் தான்..

கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு..

வலிகளை தாங்கி தாங்கியே என் மனம் கள்ளாகிப் போனது.. இனி காயமும் இல்லை.. வலிகளும் இல்லை.. போலியான சந்தோசம் மட்டுமே என் வாழ்க்கை..

மனம் மறத்துவிட்டது.. இதை விடவா மரணம் வலித்து விடப் போகிறது என்று தோன்றுகிறது..

இந்த உலகில் உண்மையான பாசத்திற்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் துளிகள் மட்டுமே!!

Sad Love Quotes In Tamil

மறக்கவும் முடியவில்லை.. வெறுக்கவும் முடியவில்லை.. ஒரு சிலர் கொடுத்த நினைவுகளை..

அதிகமான சில்லறை சேர்த்த உண்டியலும் அதிகமான அன்பை சேர்த்த இதயமும் நிச்சயம் ஒரு நாள் உடைந்தே தீரும்..

கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி.. அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் வலி..

விருப்பம் இல்லாதவர்களை விரட்டிப் போவதை விட விலகிப் போவது நல்லது..!!

நமக்குப் பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பதை விட, அவர்களிடம் நாம் பேச நினைக்கும் பொழுதெல்லாம் நம்மை நாமே கட்டுப்படுத்தும் நொடிகள் தான் கொடுமையிலும் கொடுமை..

இதையும் படியுங்கள்:

Love Failure Quotes In Tamil For Boy

இன்று நான் இருக்கும்போது புரியாத என் காதல், ஒரு நாள் நான் இல்லாமல் போகும்போது புரியும்.. ஆனால் அன்று நீ தேடினாலும் நான் கிடைக்க மாட்டேன்..

மனசாட்சி இருந்தால் ஒருமுறை என்னோடு இருந்த நாட்களை நினைதுப்பார்.. அந்த நேரம் உன் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தாலும் போதும்!! என் அன்பு உண்மையானது!!!

நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருப்பது நேரமும் காலமும் மட்டுமல்ல.. சில மனிதர்களின் மனமும் தான்...

பிடித்த ஒரு உறவை சேரவும் முடியாமல் யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் முடியாமல் தவிக்கின்ற நொடி தான் உலகத்தில் மிகவும் கொடியது..

என்னை கண் கலங்க வைக்கிறாய் என்பதற்காக உன்னை வெறுத்து விட மாட்டேன்.. இன்னும் அதிகமாகத் தான் நேசிப்பேன்!!

நானோ உன்னுடன் பேசுவதற்காக மற்றவர்களை ஒதுக்குக்கிறேன்.. ஆனால் நீயோ மற்றவர்களிடம் பேசுவதற்காக என்னை ஒதுக்குகிறாய்..

உணர்வுகளை புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தால் என்ன? அழுதால் என்ன.? இரண்டுமே ஒன்றுதான்!!

இன்று நீ எனக்கு செய்த துரோகத்தின் வலி, நாளை நீ நம்பிய ஒருவர் உன்னை ஏமாற்றும் போது உனக்கு புரியும்..

பதிலுக்கு அன்பை எதிர்பார்க்கும் காதல் தோல்வியடைகிறது.

நீதான் என் உலகம் என்று உயிராக நேசித்தேன்.. ஆனால் உன் உலகிலோ நான் இல்லவே இல்லை என்பதை கடைசியில் தான் தெரிந்து கொண்டேன்..

உனக்காக வீணாகியது என் நேரம் மட்டுமல்ல.. என் வாழ்க்கையும் தான்..

Love Failure Quotes In Tamil For Girl

ஒரு பெண்ணின் கோபத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஆத்திரங்கள் அல்ல... சொல்ல முடியாத ஏமாற்றங்களும் வலிகளும் மட்டுமே!!

என்னை அறியாமலே உன்னை அதிகம் நேசித்து விட்டேன்.. அதனால் தான் இன்று உன்னை நினைத்து என்னை அறியாமலே கண்ணீர் விடுகிறேன்..

ஒவ்வொரு முறையும் உணர்த்திக்கொண்டே இருக்கிறாய்.. நான் உனக்கு முக்கியம் இல்லை என்று.. இந்த பைத்தியக்காரிக்கு தான் புரிந்தும் மனம் ஏற்க மறுக்கிறது..

நம் பிரிவால் ஒருவரது வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும் என்றால் நாம் அவரை விட்டுப் பிரிவதில் தவறில்லை..

கண்ணீரை துடைக்க வேண்டிய உறவே கண்ணீருக்கு காரணமானால் வாழ்க்கை முழுவதும் சோகம்..

வார்த்தையால் கொன்றுவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு என்ன பயன்.. வலிகள் குறையப் போவதும் இல்லை.. பேசிய வார்த்தைகள் மனதில் இருந்து அழியப்போவதும் இல்லை..

எவ்வளவு தான்  அன்பு காட்டினாலும் சலித்து தான் விடும் போல.. நாமும் நம் அன்பும்..

நான் இல்லையென தெரிந்த போது தான் உணர்வாய்.. நான் செய்த தொல்லையிலும் உண்மையான பாசம் இருந்ததென..

பேசும் பேச்சும் நேரமும் குறையும் போது காலமே காட்டிக் கொடுத்து விடும்.. அவர்கள் மாற்றி விட்டார்கள் நம்மிடத்தில் வேறு ஒருவரை என்பதை..

Love Failure Images Tamil

Love Failure Quotesn in Tamil for girl

Love Failure Quotes For Him In Tamil

Love Failure Pain Quotes In Tamil

Love Failure Kavithai

Love Failure Quotes In Tamil Words
Love Failure Quotes in Tamil
Love Failure Quotes In Tamil For Boy

Sad Love Quotes In Tamil

Love Failure Image Tamil Kavithai

Love Failure Kavithai Tamil Lyrics

Life Failure Quotes In Tamil

Love sad kavithai Tamil

Very sad love quotes images in Tamil

Love sad images in Tamil
காதல் தோல்வி கவிதை

காதல் தோல்வி கவிதை Images

பெண்கள் காதல் தோல்வி status

Sad love failure quotes in Tamil

Sad life quotes in Tamil

Pirivu kathal kavithaikal