-->

25+【Best】Love Feeling Quotes in Tamil Words | லவ் பீலிங் கவிதைகள்

இந்த இடுகையில் உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் 25-க்கும் மேற்ப்பட்ட மிகச்சிறந்த Love Feeling Quotes in Tamil (லவ் பீலிங்) பற்றி தொகு...,

Love Feeling Quotes In Tamil

இந்த இடுகையில் உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் 25-க்கும் மேற்ப்பட்ட மிகச்சிறந்த Love Feeling Quotes in Tamil (லவ் பீலிங்) பற்றி தொகுக்கப்பட்டுள்ளது.

  • Love feeling Quotes in Tamil
  • Love feeling Quotes Tamil
  • Love feel Quotes Tamil
  • Love feeling Tamil Quotes

Best Love Feeling Quotes in Tamil

1. பார்த்துக்கொண்டே இருப்பது அல்ல காதல்.. ஒருமுறையாவது பார்த்துவிட முடியாதா என ஏங்க வைப்பதே காதல்.. 

2. இணைந்து வாழ்த்தல் மட்டுமே காதல் இல்லை.  நினைத்து வாழ்ந்தாலும் காதல் தான். 

3. இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்க்கு அடிமையாக இருக்கிறார்கள்.. நானும் அடிமைதான்... என்னவளின் அன்பிற்கு.. 

4. உன் நினைவில் கூட நான் இருப்பேனோ இல்லையோ என் தெரியவில்லை.. ஆனால் எந்தன் நினைவே நீயாகத்தான் இருக்கிறாய்.. 

5. காற்றின் பெருமை அதை சுவாசிக்கும் போது தான் தெரியும்.. அன்பின் அருமை நாம் நேசித்தவர்களை விட்டுப் பிரியும் போது தான் புரியும்..!! 

Kavithai In Tamil Love Feel

6. வருடம் மாறலாம் வாழ்க்கை மாறலாம்.. ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசிய நாட்களும் பழகிய நிமிடமும் என்றென்றும் மாறாது..!!

7. உன் கோபத்தை குறைப்பதற்க்காக நான் ஒரே ஒரு முறை முத்தம் கொடுத்தேன்.. இப்பொழுதெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்காகவே நீ அடிக்கடி கோபப்படுகிறாய்.!!

8. உதடுகள் சொல்கிறது உன்னிடம் பேசும் நிமிடங்கள் சொர்க்கம் என்று... கண்கள் சொல்கிறது உன்னைக் காணாத நொடிகள் நரகம் என்று...

9. உன்னை நினைப்பது என்னை விழிக்க வைக்கிறது. உன்னை கனவு காண்பது என்னை உறங்க வைக்கிறது. உன்னுடன் இருப்பது என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

10. சில நேரங்களில் தனிமை மீது அதிகம் காதல் கொள்கிறேன்.. உன் நினைவுகளோடு வாழ்வதால்...

11. தொலைந்து போகவே நினைக்கிறேன்.. தொலையா உன் நினைவுகளில்..

Tamil Love Feeling Kavithai Images

12. நேசிக்கும் போது கிடைத்த முத்தத்தை விட அவளை நேசிக்காத போதும் அவளை நினைவுபடுத்தும் அவளின் முத்தமே சுகமானது.. அவளின் உதடுகளைப் போல..!!

13. எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் "என்கூட நீ பேச மாட்டியா" என நீ கேட்க்கும் கேள்வியில் விழுந்துவிடுகிறது.. என் கோபம் மொத்தமும் காதலாக...

14. மனமும் குழந்தை தான்.. உன்னையே நினைப்பேன் என்று அடம் பிடிப்பதில்...

15. தனிமை என்னும் சிறையில் தவித்தேன்.. ஆனால் அதுவும் புதுமையாகிறது நீ என் நினைவில் இருக்கும்போது..!!

16. தொல்லை தரவும் மனமில்லை.. உன்னை விட்டுத் தொலைந்து போகவும் மனமில்லை.. முடிவில் என்ன ஆவேன் என்று எனக்குத் தெரியவில்லை.

17. ஆயிரம் தான் நெருங்கி பழகினாலும் ஒரு சின்ன செயல் மூலம் நாம அவங்களுக்கு யாரோ தான் னு உணத்திடுறாங்க.

Feelings Kavithai In Tamil

18. யார் யாரையோ சந்திக்க கிடைக்கும் சந்தர்ப்பம் ஏனோ உன்னைக் காண மட்டும் கிடைக்காமல் போகிறது.

18. மரண வலியை விட கொடுமையானது நமக்கு பிடிச்சவங்களோட மவுனம்...

19. நான் திரும்பாத பயணம் என் மரணம். அதுவரை நான் விரும்பாத பயணம் உன் பிரிவு...

20. நமக்கு பிடிச்சவங்க கூட நமக்கு பிடிச்ச மாதிரி வாழனும்-னு ஆயிரம் கனவு இருக்கும். ஆனா நாம அவங்க கூட கனவுல மட்டும் தான் வாழ்ந்துட்டு இருப்போம்...

21. பேசாமல் இருந்தா அழுக வருது.. பேசினா சண்டை வருது...

22. எதற்க்கு இந்த வாழ்க்கை என்று கேட்ட எனக்கு கடவுள் தந்த பதில் நீயடி!!

Feel And Sentiment Kavithai

23. நம்முடன் பழகியவர்கள் நம்மை விட்டுப் பிரியும் வலியை விட அவர்கள் நம்மை யாரென்று தெரியாதவாறு நடந்துகொள்ளும் போது தான் அதிகம் வலிக்கின்றது...

24. என் நினைவுகளைத் தொலைத்து விட்டு உன்னால் வாழ முடியும் என்றால், என் அன்பு தோற்றுவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்!!

25. என்னால் மட்டுமே உன்னை அதிகமாக காதலிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன்.. உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என்று நீ நிரூபித்து விட்டாய்...

26. என் நினைவுகள் வந்தாலும் நீ என்னை தேடாதே.. உன் இதயத்தைத் தொட்டுப்பார்.. நான் உன்னை நினைத்துக்கொண்டு துடித்துக்கொண்டு இருப்பேன் உனக்காக...

27. ஒருநாள் நீ புரிந்து கொள்வாய்.. உன்னைவிட்டு விலகும் போது எனக்கு எவ்வாறு வலித்தது என்பதை.. அந்த நாள் நீ என்னை நேசிப்ப்பாய் என்னை போலவே..

28. இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்தவரை என்றென்றும் வெறுப்பதில்லை...

Love Feeling quotes Tamil