Sai Baba Quotes in Tamil, சாய் பாபா பொன்மொழிகள்
Saibaba Quotes In Tamil
சாய் பாபாவின் நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள் பற்றி இந்த இடுகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பொன் மொழிகளை பகிர்ந்து உங்கள் காலைப் பொழுதை இனிமையாக தொடங்குங்கள்!!
தொடர்புடைய தேடல்கள்
- Shirdi Sai Baba Tamil Quotes
- Sai Baba Motivational Quotes Tamil
- Shirdi Sai Baba Images With Quotes
- Shirdi Sai Quotes
- Shirdi Sai Baba Thought For The Day
Saibaba Quotes Tamil
எத்தனை பேர் கூடி உனது வழியை அடைத்தாலும், அத்தனை பேரும் வியக்கும்படியாக நான் உனக்கு பல வழிகளை திறப்பேன்!! கலங்காதே!! ஓம் சாய்ராம்!!
துன்பம் மனக்கவலை வந்தாலும் மனதில் வேதனை கொள்ளாதீர்கள். என்னையே நினையுங்கள். எனது உதவி எந்த வடிவிலாவது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
மகிழ்ச்சியாக இரு. தன்னந்தனியாக நிற்கும்போது கடவுள் உன்னோடு இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இரு.
குடும்பத்தில் ஒரேயொருவர் என் மீது நம்பிக்கை கொண்டு சரணடைந்திருந்தாலும் கூட, அவர் பொருட்டு அந்த குடும்பத்தையே காப்பாற்றும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது சாயி வாக்கு.
தேடி தேடி சென்று அன்பை தினிக்காதே.. அது அவர்களுக்கு திகட்டி விடும். அன்பு கூட மருந்தளவு இருந்தால்தான் மதிப்பு!!
Sai Quotes In Tamil
நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் துணை இல்லை என்று கலங்காதே!! உனக்காக ஏதோ ஒரு உருவில் உன்னுடன் துணையாக நான் வருவேன்.
உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.. வலி கொடியது. தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே.. வாழ்க்கை பெரியது.
என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக் கொள்வோர் ஒருபோதும் பலவீனர்கள் ஆக மாட்டார்கள்.
எது நடந்தாலும் பொறுமையை இழந்து விடாதே. சாயின் மீது நம்பிக்கை வைத்துப் பார். சோதனையும் சாதனையே.
அனைவரிடமும் அன்பாக பேசு. நீ வருத்தப்படுவதால் எதுவும் மாறாது. நம்பிக்கையோடு கம்பீரமாக உன் குறிக்கோளை நோக்கி செல். நீ அதை அடைய நான் துணை இருப்பேன். இது என் சத்திய வாக்கு. நான் உன் முன்னே தான் சென்றுகொண்டு இருக்கிறேன்.
Sai Baba Tamil Quotes
ஒரு கதவு முடப்படும்போது அதைவிட சிறந்த ஒரு கதவு திறக்கப்படுகிறது. அதனால் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படுமம் கதவை தவறவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும் என நம்புங்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!!
எங்கு பொறுமை, நம்பிக்கை இரண்டும் இருக்கிறதோ அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன். என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
நான் இருக்கும் வரை நீ கலங்காதே. நான் உன்னை கைவிட மாட்டேன்!! எனது ஆசீவாதத்தினால் நீ அனைவராலும் மதிக்கப்படுவாய்!!
Sai Baba Arulvakku In Tamil
உன்னுள் நீ புலம்பிய நாள் எல்லாம் இனி மறைந்து போகப் போகிறது. உன்னுள் புத்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் எல்லாம் இனி உன்னிடத்தில் இருந்து நடத்தி வைப்பேன்.!!
என் மேல் நீங்கள் வளர்த்து வரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பல லீலைகள் புரிந்து, பொறுமையை கற்பித்து உங்களை வளர்ச்சி அடையச் செய்வேன்.
Shirdi Sai Baba Tamil Quotes
உன்னை எந்த நேரத்திலும் கைவிட மாட்டேன். நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் நான் உனக்கு துணை நிற்பேன்!!
உயிருக்கு உயிராய் நான் உன்னை. பாதுகாப்பேன். எதற்காகவும் நீ அஞ்சாதே. உன்னோடும் உன் குடும்பத்தோடும் உன் சாய் அப்பா நான் இருக்கிறேன்!!
அன்பு குழந்தையே சோதனை காலம் வரும்போது பயப்படாதே. உனக்கு பின் இருப்பது நான். நீ தைரியமாக நின்று போராடு. உன்னை கைவிட மாட்டேன். நிச்சயம் வாழ்வில் வெற்றி உனக்கே.
இன்று நம்பிக்கையோடு செயல்படும் ஒவ்வொரு சுய காரியங்களும் வெற்றி பெறும். உடன் நானிக்கிருக்கிறேன். ஓம் சாய்ராம்.
Sai Baba Motivational Quotes In Tamil
அன்பு மகனே. இது உனக்கும் எனக்கும் உண்டான போட்டி அல்ல! பக்திக்கும் பகவானுக்கும் உண்டான போட்டி! சந்தேகம் வேண்டாம். ஜெயிக்கப் போவது நீதான்!!
நீ சிந்திய கண்ணீர், நீ பட்ட துன்பம், மனிதருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் தெய்வத்திற்கு தெரியும் அதன் வலி என்னவென்று. கவலையை விடு.
காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறு யாரும் அறிவாறில்லை. கடமையை செய். கடவுளை நினை. நடப்பதெல்லாம் நன்மைக்கே.
உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்லி அழு. ஏனெனில் அவர் மட்டுமே அதை யாரிடமும் சொல்லி சந்தோஷப்படமாட்டர்.
Sai Baba Words In Tamil
போனது போகட்டும் வாழ்க்கையை இன்று தான் புதியதாக ஆரம்பித்ததாக எண்ணி பாபாவின் துணையோடு மீண்டும் களத்தில் இறங்கு. இனி வெற்றி நிச்சயம்!!
யார் உன்னை வெறுத்தார்களோ, யார் உன்னை உதார்சினப்படுத்தினார்ளோ, யார் உன் நம்பிக்கையை கெடுத்தார்களோ அவர்கள் முன் நீ மேன்மேலும் வளர்ச்சி அடைந்து உன் வாழ்வில் வெற்றி பெறப் போகிறாய்.
திடீர் என்று ஒரு திருப்பம் வரும். அதுவரை பொறு மனமே. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் தேவை.
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து. சில காயங்களுக்கு மௌனம் மருந்து. ஆனால் எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி.
Sai Baba Message Today
கடவுள் கவலை இல்லாத வாழ்க்கையை யாருக்கும் தருவதில்லை. ஆனால் கவலையை தாங்கும் மன வலிமையை கேட்டால் தருவார்.
இனி வரும் காலங்களில் உன் வளர்ச்சி வளர்ந்துகொண்டே போகும். என் மீது நம்பிக்கை வைத்து செயல்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீ முயற்சி செய்யும் அனைத்தும் வெற்றி பெறும். ஓம் சாய் ராம்.
அன்பு குழந்தையே சோதனை காலம் வரும்போது பயப்படாதே. உனக்கு பின் இருப்பது நான். நீ தைரியமாக நின்று போராடு. உன்னை கைவிட மாட்டேன். நிச்சயம் வாழ்வில் வெற்றி உனக்கே.
நீ என்னை தாயாய் தந்தையாய் நண்பனாய் நினைத்து புலம்பி தவித்தது எனக்கு தெரியும். வருந்தாதே நான் உன் நிழலாக துணை இருக்கிறேன். நீயே என்னை விட்டு விலகினாலும் நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்.
Positive Shirdi Sai Baba Quotes
உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பில்லாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோல, நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் வீழ்ந்து போக மாட்டார்கள்.
உனக்கு பிறவியிலேயே உதவும் மனம் உண்டு. எப்போதும் ஓடி ஓடி உதவுவாய். ஆனால் உன் கஷ்டங்களை பங்குபோட யாரும் முன் வரவில்லை என வருந்தாதே.. உன் சாய் நான் இருக்கிறேன்.
தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும்வரை வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை. பாரமும் இல்லை.
உன் பிராத்தனைக்குவ் பதிலளிக்க தொடங்கிவிட்டேன். உனக்கு வந்த தடைகளை எல்லாம் அகற்றி விட்டேன். இனி எல்லாம் ஜெயமே!
Sai Baba Advice In Tamil
நான் உன்னைக் கலங்க வைக்கிறேன் என்று நினைக்காதே. காத்திருப்பதின் பலனை அறியும்போது நீயே கண் கலங்குவாய். அதற்கான காலத்தை அடைய நீ நெருங்கி கொண்டு இருக்கிறாய்.
மனக்கவலையுடன் வாழும் உன் வாழ்க்கை ஒருநாள் மாறும். நான் மாற்றுவேன். நம்பிக்கையுடன் காத்திரு.
உன்னை நினைக்காத நாளில்லை.. உன்னை நினைக்காமல் நானுமில்லை. எல்லாம் எம் சாய்🙏
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு அதிகம். அதை மனிதனிடம் காட்டாதே. இறைவனிடம் காட்டு.
Post a Comment